search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேல் ரத்னா விருது"

    • விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதாகும்.
    • பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்றார்.

    மத்திய அரசால் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதாகும். கேல் ரத்னா விருதுக்கு தகுதியான வீரர்- வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்கின்றன.

    இந்தாண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்ற துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு வைரலானது.

    அவரது பதிவில், "கேல் ரத்னா விருதுக்கு நான் தகுதி வாய்ந்தவரா?" என்று அவர் பதிவிட்டுள்ளார். அதில் 2 வெண்கல பதக்கத்துடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

    இந்த பதிவு வைரலானதும் நெட்டிசன்கள் மனு பாக்கரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். தனது பதிவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததும் அந்த பதிவை மனு பாக்கர் நீக்கியுள்ளார். 

    • கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது.
    • செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது.

    இதேபோல், அர்ஜூனா விருதுக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன், பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயாசென், எச்.எஸ்.பிரனோய் உள்பட 25 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது, புரஸ்கார் விருது உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய விருது வழங்கும் விழா இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

    ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. பிரமோத் போகத் (பாரா-பேட்மிண்டன்), மிதாலி ராஜ் (கிரிக்கெட்), சுனில் சேத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

    விருது பெற்ற அவனி லெகாரா
     
    இதேபோல் மல்யுத்த வீரர் ரவிக்குமார், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை (துப்பாக்கி சுடும் போட்டி) அவனி லெகாரா, பாரா- தடகள வீரர் சுமித் அன்டில் ஆகியோரும் தயான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றனர்.
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் கேல் ரத்னா விருது பெற்ற விராட் கோலிக்கும் வாழ்த்து கூறியுள்ளார். #ManmohanSingh #HappyBirthdayDrSingh #ModiWishes
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மேகன் சிங் இன்று 86-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். டாக்டர் மன்மோகன் சிங் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.



    இதேபோல் கேல் ரத்னா விருது பெற்ற விராட் கோலி மற்றும் பிற தேசிய விளையாட்டு விருதுகளைப் பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கும் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

    ‘விளையாட்டுத் துறையில் பல ஆண்டு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் செயல் திறனால் வீரர்களுக்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளன. நமது விளையாட்டு வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது’ எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று விருதுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. #ManmohanSingh #HappyBirthdayDrSingh #ModiWishes
    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. #RajivGandhiKhelRatna #BajrangPunia #ViratKohli
    புதுடெல்லி :

    சர்வதேச அளவில் சாதிக்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு, அவர்களின் சாதனை அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    அவ்வாறு விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கேபடன் விராட்கோலி, உலக பளுதூக்குதல் சாம்பியனான மீராபாய் சானு ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கு காமன்வெல்த் போட்டியிலும் ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அதிருப்தி தெரிவித்தார். புள்ளிகள் அடிப்படையில் தாம் அதிக புள்ளிகளை எடுத்த போதும், விருது வழங்காமல் ஏன் என்னை புறக்கணித்தனர் என கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக அவர் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் பஜ்ரங் பூனியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேல் ரத்னா விருதுக்கு எனது பெயரை ஏன் பரிசீலிக்கவில்லை என மந்திரியிடம் கேட்டேன். அதற்கு அவர் நான் விருதுக்கான புள்ளிகளை பெறவில்லை என்று கூறினார். அது தவறு. விராட்கோலி, மீராபாய் சானுவை விட நான் அதிக புள்ளிகள் பெற்று உள்ளேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும். அதில் எனக்கு சாதகமான பதில் வரவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்வேன் என்றார்.



    அவரது இந்த கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் புள்ளிகள் என்பது வீரர்களின் சாதனையை ஒட்டுமொத்தமாக வேறுபடுத்தி கணக்கிடுவது அல்ல. ஒரு வீரர் அவர் சார்ந்த விளையாட்டு துறையில் சாதித்ததை மட்டுமே அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.

    எனவே, டெஸ்ட், ஒருநாள், டி20 என்ற மூன்று வித போட்டிகளின் ஐசிசி தரவரிசை பட்டியளில் இரண்டு விதமான போட்டிகளில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் மீரா பாய் சானு மட்டுமே ஒலிம்பிக் சாம்பியனாக உள்ளார். இதன் அடிப்படையிலேயே அவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர் என விளக்கம் அளித்துள்ளது.

    இதற்கிடையே, கோர்ட்டுக்கு செல்வதாக கூறிய பஜ்ரங் பூனியாவை அவரது பயிற்சியாளர் சாமாதானப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #RajivGandhiKhelRatna #BajrangPunia
    விராட் கோலி மற்றும் மீராபாய் சானுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. #ViratKohli
    மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத்துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு இந்த துறையின் மிக உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கும்.

    இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதனடிப்படையில் விராட் கோலி, மீராபாய் சானு உள்பட பல வீரர்களின் பெயர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.



    இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
    ×